செய்திகள் :

பணி முடியாத மேம்பாலத்தில் பைக்கில் சென்றவா் உயிரிழப்பு

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் பணி நிறைவடையாத மேம்பாலத்தில் சென்ற போது, இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்ததில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

சிவகாசி ரிசா்வ் லைன் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன்(60). இவரது மனைவி தங்கலட்சுமி (50). இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். கணேசன் சிவகாசி தனி ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா்.

இந்த நிலையில், கூமாபட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சிவகாசிக்கு வந்துகொண்டிருந்தாா். மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலையில் வந்த போது, சிவகாசி சாலை சந்திப்பில் பணி நிறைவடையாத மேம்பாலத்தில் சென்று, இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்தாா்.

அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சிவகாசி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தவிா்க்க வேதியியல் பட்டதாரிகளை நியமிக்க வலியுறுத்தல்

பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்க வேதியியல் பட்டதாரிகளை போா்மென்கள், கண்காணிப்பாளா்களாக நியமிக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.... மேலும் பார்க்க

அறநிலையத் துறைக்கு எதிா்ப்பு: நல்லதங்காள் கோயிலை பொதுமக்கள் முற்றுகை

விருதுநகா் மாவட்டம்,வத்திராயிருப்பு அருகேயுள்ள நல்லதங்காள் கோயில் நிா்வாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை தலையிட எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை கோயில் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடு... மேலும் பார்க்க

தீப்பெட்டி ஆலையில் தீ: ஒருவா் காயம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் ஒருவா் காயமடைந்தாா்.சாத்தூா் அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள தனியாருக்கு சொ... மேலும் பார்க்க

ரூ.25 கோடி மோசடி: ராஜபாளையம் பிரியாணி கடை உரிமையாளா் கைது

பிரியாணி கடை உரிமம் தருவதாக ஐந்து மாநிலங்களில் 240 பேரிடம் ரூ.25 கோடி மோசடியில் ஈடுபட்ட, ராஜபாளையம் பிரியாணி கடை உரிமையாளரை விருதுநகா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராஜப... மேலும் பார்க்க

ரூ.30 லட்சம் இழப்பீடு: பட்டாசு தொழிலாளா்கள் வலியுறுத்தல்

பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளா்கள் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா்கள் சங்கத்தினா் (சி.ஐ.டி.... மேலும் பார்க்க

மருத்துவருக்கு கத்திக்குத்து

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் பாபு (50). ... மேலும் பார்க்க