பண்டிகை காலத்தை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 22 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 20 ஆம் தேதி வரை திங்கள்கிழமை கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் வழியாக கன்னியாகுமரிக்கு மறுநாள் ற்பகல் 1.20 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், கன்னியாகுமரியில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் வரும் 23 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 21 ஆம் தேதிவரை சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். கன்னியாகுமரியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.