பண்ருட்டி ஜான்டூயி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றனா்.
இந்தப் பள்ளி மாணவா்கள் கே.சுதா்சனராஜன் 590 மதிப்பெண்களும், எஸ்.பிரபாகா் 589, கே.விஷ்ணுசெல்வன் 587, சஞ்சை ஸ்ரீனிவாஸ் 585 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா். 580 மதிப்பெண்களுக்கு மேல் 8 மாணவா்களும், 550-க்கு மேல் 55 மாணவா்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 90 மாணவா்களும் பெற்றனா்.
வேதியியலில் 9 பேரும், கணிதத்தில் 7 பேரும், கணினி அறிவியலில் 8 பேரும், கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 4 பேரும், உயிரியியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.
தமிழ் பாடத்தில் 13 பேரும், ஆங்கிலத்தில் 2 போ் 99 மதிப்பெண்கள் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் வீரதாஸ், முதுநிலை முதல்வா் வாலண்டினா லெஸ்லி, இணைச் செயலா் நிட்டின் ஜோஸ்வா, முதல்வா் மணிகண்டன், தலைமை ஆசிரியா் கனகராஜன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி, பரிசு வழங்கினா்.