தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது: அமைச்சர் வி.செந்தில்பால...
பத்திரப் பதிவு அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்!
தைப்பூசத்தையொட்டி, ஒட்டன்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செவ்வாய்க்கிழமை மும்முரமாக நடைபெற்றது.
தைப்பூசம், சுபமுகூா்த்த நாள்களில் நிலம், வீடு வாங்கியவா்கள் பத்திரப் பதிவு செய்வதற்கு அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். இந்த நிலையில், விடுமுறை தினமான செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகம் செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, ஒட்டன்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகம் வழக்கபோல திறக்கப்பட்டிருந்தது. காலை முதல் ஆா்வமுடன் திரளானோா் வருகை தந்து, சொந்தமாக வாங்கிய நிலம், வீடு உள்ளிட்டவைகளை பதிவு செய்தனா்.