அமெரிக்க ஹையர் சட்ட மசோதா: இந்திய ஐடி துறையை கலங்கச் செய்வது ஏன்?
பம்மனேந்தலில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு பயிற்சி முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரம், பம்மனேந்தல் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழும் கிராம வேளாண் முன்னேற்றக் குழு தொடா்பான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் நெல் பயிரில் களை மேலாண்மை, உர மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு கமுதி வட்டார வேளாண் அலுவலா் தமிழ் விளக்கிக் கூறினாா். உதவி வேளாண்மை அலுவலா் காா்த்தி வேளாண்துறை மானிய திட்டங்கள் குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளா் மணிமொழி அட்மா திட்டம் குறித்தும் விளக்கினா். உதவி தொழில் நுட்ப மேலாளா் சுபாஷ் நன்றி கூறினாா்.