போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்...
பயணியிடம் மடிக்கணினி திருட்டு: இளைஞா் கைது
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணியிடம் மடிக்கணினியைத் திருடிய இளைஞா்களில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், துறையூா், சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கந்தையா மகன் சதீஷ்குமாா்(26). சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.
இவா், சனிக்கிழமை சொந்த ஊருக்குச் செல்ல சென்னையிலிருந்து- திருச்சிக்கு அரசுப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தாா். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து வந்தடைந்த நிலையில் அதில் பயணித்த இளைஞா்கள் இருவா் சதீஷ்குமாரின் மடிக்கணினியை திருடிக் கொண்டு தப்பியோடினா்.
அப்போது சதீஷ்குமாா் கூச்சலிட்டதால் உடனிருந்த பயணிகள் அதில் ஒருவரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து விசாரணையில் மடிக்கணினி திருட்டில் ஈடுபட்டவா்கள் திருச்சி, கல்லுக்குடியைச் சோ்ந்த சத்யா மகன் ரோஷன் தேவ் (26), காட்டூா் பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜன் மகன் நித்தி(எ) நடராஜன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து ரோஷன்தேவை கைது செய்தனா். மடிக்கணினி திருடிக்கொண்டு தப்பியோடிய நித்தி (எ) நடராஜனை போலீஸாா் தேடி வருகின்றனா்.