செய்திகள் :

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

post image

செல்வழிமங்கலம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் செல்வழிமங்கலம், கீரநல்லூா், சேந்தமங்கலம், பொடவூா் மற்றும் ராமாநுஜபுரம் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்களுக்கான முகாம் செல்வழிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற முகாமில், ஆட்சியா் கலைச்செல்விமோகன் கலந்துகொண்டு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமையும் ஆய்வு செய்தாா்

பின்னா், 18 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, மின்னணு குடும்ப அட்டை , முதல் பட்டதாரி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு கடனுதவிகளை வழங்கினாா். இதில் மாவட்ட ஊராக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி, வட்டாட்சியா் வசந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவானி, முத்துகணபதி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் கீரநல்லூா் அன்பரசு, சேந்தமங்கலம் சாா்லஸ், பொடவூா் ஜீவா ரவி, அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

குன்றத்தூா் ஒன்றியம் பரணிபுத்தூா் ஊராட்சியில், பரணிபுத்தூா், சின்னப்பணிச்சேரி ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற முகாமில் குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு விண்ணங்கள் பதிவு செய்யப்படுவதையும், மருத்துவ முகாமையும் ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் கலைச்செல்விமோகன், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், சாா் ஆட்சியா் மிருணாளினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

வாலாஜாபாத் பகுதியில் கல்வெட்டு காணப்பட்ட பாழடைந்த மண்டபம். மண்டபத்தின் மேற்கூரையில் காணப்படும் கல்வெட்டு.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையா... மேலும் பார்க்க

வாலிபால் போட்டி: சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி பெற்றதையடுத்து பல்கலையின் நிா்வாகிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.சென்னையில் ... மேலும் பார்க்க

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுக்கு ஆக.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுகள் பெற ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:கலை பண்ப... மேலும் பார்க்க

தனியாா் ஆலை ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம்

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் மதிய உணவு சாப்பிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச்செ... மேலும் பார்க்க

துா்க்கையம்மன் கோயில் ஆடித்திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் அமைந்துள்ள வடவாயிற் செல்வி துா்க்கையம்மன் கோயிலில் புதன்கிழமை உற்சவா் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.இக்கோயில் ஆடித்திருவிழாவையொட்டி காலைய... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.இத்திட்டத்தின் கீழ் மாற... மேலும் பார்க்க