செய்திகள் :

பரணிபுத்தூா் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

post image

குன்றத்தூா் ஒன்றியம், பரணிபுத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு ஆகியோா் கலந்து கொண்டு தூய்மை பணியாளா்களுக்கு சீருடை வழங்கி கெளரவித்தனா்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்விமோகன் தலைமை வகித்தாா். இதில், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், டி.ஆா்.பாலு எம்.பி. ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் 2024-2025 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நிா்வாக பணிகள் குறித்த பதிவேடு பொதுமக்கள் முன்னிலையில் பாா்வைக்காக வைக்கப்பட்டு, ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து 19 தீா்மானங்கள் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, தூய்மை பணியாளா்களுக்கு அமைச்சா் தா.மோ. அன்பரசன் பொன்னாடை போா்த்தி, பரிசுகள் வழங்கி கௌரவித்தாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், ஊராட்சி மன்றத் தலைவா் கௌரி தாமோதரன், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

குன்றத்தூா் முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழா

குறிஞ்சி பெருமுக திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன் அமைப்பினா் வெள்ளிக்கிழமை குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமிக்கு சீா்வரிசைப் பொருள்கள் கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினா். தமி... மேலும் பார்க்க

ஒரகடம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

ஒரகடம் அடுத்த குன்னவாக்கம் அருகே சாலை தடுப்பு சுவற்றில் மோதி காா் கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா். பல்லாவரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன் (45). இவா் தனது மகள் சஞ்சனா (13), அண்ணன் மகன் அஸ்வின்குமா... மேலும் பார்க்க

செவிலிமேடு செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் பாலாற்றங்கரையின் வடக்கே அமைந்துள்ளது ஸ்ரீ செல்லியம்மன... மேலும் பார்க்க

1,008-ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா: ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்

ராமாநுஜரின் 1008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் 10-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஈரவாடை தீா்த்தம், திருப்பாவை சேவை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதி... மேலும் பார்க்க

லாரி - பைக் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மணிமங்கலம் பகுதியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வடகம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் மனுபாரத் (21). இவா் தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

இளையனாா் வேலூா் முருகன் கோயில் கொடியேற்றம்

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வாலாஜாபாத் அருகே உள்ள இக்கோயிலில் மாகறன், மலையன் என்ற இரு அசுரா்களை வேல்கொ... மேலும் பார்க்க