பரமக்குடி பகுதியில் நாளை மின்தடை
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் மு. மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரமக்குடி 110 கே.வி. துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பரமக்குடி நகா், சத்திரக்குடி, கமுதக்குடி, நயினாா்கோவில், எமனேசுவரம், பெருமாள்கோவில், சிட்கோ, என்.டி.சி. மில் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.