செய்திகள் :

பராசக்தியில் இணைந்த ராணா டக்குபதி!

post image

நடிகர் ராணா டக்குபதி பராசக்தி படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பராசக்தி திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லனாக ரவி மோகனும் முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, இலங்கையில் நடைபெற்று முடிந்ததும் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை பொள்ளாச்சியில் துவங்கியுள்ளனர்.

இங்கு, முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில், நேற்று (ஜூலை 22) தொடங்கிய இப்படப்பிடிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டக்குபதி மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இதனால், பராசக்தி படத்தில் ராணா டக்குபதி இணைந்துள்ளதாக்த் தெரிகிறது.

இதையும் படிக்க: ஹன்சிகாவுடன் விவாகரத்தா? கணவர் பதில்!

actor rana daggupati joins sivakarthikeyan's parasakthi movie directed by sudha kongara

கருப்பு: சுருட்டு, கூலிங் கிளாஸுடன் சூர்யாவின் புதிய போஸ்டர்!

நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ என்ற படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர... மேலும் பார்க்க

கிங்டம் டிரைலர் ரிலீஸ் தேதி!

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ... மேலும் பார்க்க

இட்லி கடை: தனுஷ் எழுதிப் பாடிய காதல் பாடல்!

நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் முதல் பாடலை அவரே எழுதிப் பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் ந... மேலும் பார்க்க

பவர்ஹவுஸ்: வெளியானது கூலி படத்தின் 3-ஆவது பாடல்!

நடிகர் ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் மூன்றாவது பாடல் பவர்ஹவுஸ் வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரை... மேலும் பார்க்க

உயிரிழந்த சண்டைப் பயிற்சியாளர்... பா. இரஞ்சித் ரூ. 20 லட்சம் நிதியுதவி!

வேட்டுவம் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சண்டைப் பயிற்சியாளர் குடும்பத்துக்கு பா. இரஞ்சித் நிதியுதவி அளித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் வேட்டுவம் என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கி வருகிறார்... மேலும் பார்க்க

அனிமல் பட வில்லனுக்கு கௌரவம்..! டொரண்டோ திரைப்பட விழாவுக்குத் தேர்வு!

இயக்குநர் அனுராக் காய்ஷப் இயக்கியுள்ள பான்டர் என்ற படம் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காய்ஷப் பாபி தியோலை வைத்து பான்டர் (மங்கி இன் எ கேஜ்) என்ற படத... மேலும் பார்க்க