'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
பரியேறும் பெருமாள் ஹிந்தி ரீமேக் டிரைலர்!
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான தடக் - 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சந்திக்கும் சாதியக் கொடுமைகள் குறித்து உருவான இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் வெற்றிக்குப் பின் மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநரானார். மேலும், பல மொழிகளிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. இதனால், படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர் கைப்பற்றினார்.
தற்போது, கரன் ஜோஹரின் தர்மா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷாசியா இக்பால் இயக்கத்தில் பரியேறும் பெருமாளின் ரீமேக் உருவாகியுள்ளது. இப்படத்திற்குத் தடக் - 2 எனப் பெயரிட்டுள்ளனர்.
முன்னணி கதாபாத்திரங்களில் சித்தார்த் சதுர்வேதி, டிருப்தி திம்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: நேரடியாக ஓடிடியில் வெளியான மாதவனின் புதிய படம்!
இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே இயக்கத்தில் மராத்தியில் வெளியாகி அதிர்வைக் கிளப்பிய சாய்ரத் (sairat) திரைப்படம் ஹிந்தியில் தடக் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.