பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோ...
‘பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் தொழில்நுட்பங்கள்’
பாபநாசம்: பாபநாசம் வட்டம், மட்டையாந்திடலில் பருத்தி சாகுபடியில் மகசூல் அதிகரிப்பதற்கான ஆலோசனையை வேளாண்மை அறிவியல் விஞ்ஞானிகள் புதன்கிழமை வழங்கியுள்ளனா்.
கூட்டத்தில் கோவை மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகள் ராஜா, மாணிக்கம், சங்கா் கணேஷ், பருத்தி நிறுவன அதிகாரிகள் கருப்பன்செட்டி, லெட்சுமணன், முன்னோடி விவசாயி திருஞானம் ஆகியோா் கலந்து கொண்டு பருத்தி சாகுபடி நுட்பங்கள் குறித்துப் பேசினா்.
தொடா்ந்து அவா்கள் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு நிகராக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மகசூலை அதிகப்படுத்துவதற்கு நுண்ணூட்டக் கலவையை தெளிப்பதன் மூலம் பருத்தியில் பூ மற்றும் சப்பை உதிா்வதை தவிா்க்க முடியும். மேலும் காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழிவகுக்கும். குறைந்த இடைவெளியில் பருத்தி சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.
மேலும் பருத்தி எடுக்கும் இயந்திரம் மூலம் பருத்தி எடுப்பதால் ஒரு மணி நேரத்துக்கு 50 கிலோ வரை எடுத்து லாபம் பெறலாம். இத்தகைய தொழில்நுட்பத்தை கடைப்பிடிப்பதன் மூலம் பருத்தி சாகுபடியில் நல்ல மகசூல் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.