பர்மிங்ஹாமில் மழை..! இந்தியா - இங்கிலாந்து போட்டி நடைபெறுமா?
இங்கிலாந்துடனான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் மழை வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, அடிக்கடி மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமாகியுள்ளது.
முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற 608 ரன்கள் இலக்காக நிரணயிக்கப்பட்டுள்ளது.
இந்த டெஸ்ட்டின் 4-ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து 72/3 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
ஹாரி புரூக் 15*, ஆலி போப் 24* ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்றும் மழை குறுக்கிட்டால் அது இந்தியாவின் வாய்ப்பினை தட்டிப்பறிப்பதாக அமைந்துவிடும். அதேசமயம் இங்கிலாந்தும் வெற்றிபெறவே நினைப்பதால் அந்த அணிக்கும் இது பாதகமாகவே இருக்கும்.
1-0 என முன்னிலை வகிக்கும் இங்கிலாந்தை விட இந்த வெற்றி இந்தியாவுக்குதான் முக்கியமானதாக இருக்கிறது.
இங்கிலாந்தில் காலை 7 மணிக்கு 79 மழை வாய்ப்பு மதியம் 1 மணி அளவில் 22 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.
இங்கிலாந்தில் காலைமுதல் மேகமூட்டமாக இருந்த வானம் தற்போது ஓரளவுக்கு சூரியன் தெரிந்திருக்கும் புகைப்படங்களை இங்கிலாந்து ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
Some of the covers are starting to come off, too… pic.twitter.com/CMHGkUKhf1
— England's Barmy Army (@TheBarmyArmy) July 6, 2025