ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்
பல்கலைக்கழக கபடிப் போட்டி: தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் சாம்பியன்
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்திற்குள்பட்ட பெண்கள் கல்லூரிகளுக்கு இடையேயான கபடிப் போட்டியில், தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கூடங்குளம் எஸ்ஏவி கல்லூரியில் நடைபெற்ற போட்டியில், 36 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரி அணியும், கூடங்குளம் எஸ்ஏவி அணியும் மோதின.
இதில், 45-க்கு 27 என்ற புள்ளிக் கணக்கில் செயின்ட் மேரீஸ் அணி வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற அணியினரை, கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் பாராட்டினா்.