செய்திகள் :

பல்கலை., பட்டமளிப்பு விழா விவகாரம்; `கட்சியில் பெயர் வாங்க தரங்கெட்ட நாடகம்!' - அண்ணாமலை கண்டனம்

post image

தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். தென் மாவட்டங்களில் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பல மாணவிகள் தங்களது பட்டங்களை ஆளுநரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்த நிலையில், ஆராய்ச்சி பட்டம் பெற வந்த மாணவி ஜீன் ஜோசப் மட்டும் ஆளுநரிடம் பட்டத்தை தராமல் நேரடியாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகரிடம் வாழ்த்து பெற்று மேடையில் இருந்து இறங்கினார்.

ஜீன் ராஜன்
ஜீன் ராஜன்

கைகளை நீட்டிக்கொண்டிருந்த ஆளுநருக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது. இருந்த போதும் ஆளுநர் சிரித்து, அந்த மாணவியை வாழ்த்தி அனுப்பினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஜீன் ஜோசப், ``ஆளுநர் தமிழ்நாட்டுக்கும் தமிழர் நலன்களுக்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் நான் பட்டம் பெற விரும்பவில்லை. இதனால் தான் எனது பட்டத்தை துணைவேந்தரிடம் கொடுத்து வாங்கினேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.

இது சம்பவம் குறித்து விமர்சித்திருந்த முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், ``நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர தி.மு.க துணைச்செயலாளர் திரு. ராஜன் என்ற நபரின் மனைவி, திருமதி. ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.

காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, தி.மு.க-வினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தி.மு.க-வின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். தி.மு.க-வைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் ஸ்டாலின் தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'முதலமைச்சருக்கு திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை' - அன்புமணி கண்டனம்

சென்னை ரிப்பன் மாளிகையில் போராடும் தூய்மை பணியாளர்கள் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சென்னையில் இராயபுரம், திருவிக ந... மேலும் பார்க்க

Ramadoss Vs Anbumani - யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நடந்து வரும் மோதல் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. இந்த விவகாராத்தில் இந்த இருவரைத் தவிர வேறு சில நபர்களுக்கும் தொடர்பிருப்பது குறித்து விளக்குகிறது இந்த வீட... மேலும் பார்க்க

`பாசக்கரம் நீட்டும் ராமதாஸ் டு மன்னர் புள்ளிகளைத் தேடும் கழகங்கள்!’ | கழுகார் அப்டேட்ஸ்

கொதிக்கும் மலர்க் கட்சி சீனியர்கள்!எதிர்த் தரப்பு எம்.எல்.ஏ-வுடன் விருந்து...மலர்க் கட்சியின் மாநிலப் பொறுப்பிலுள்ள ‘சக்கர’ புள்ளி ஒருவர், சூரியக் கட்சியின் முக்கியமான எம்.எல்.ஏ ஒருவரைத் தனது படை, பரி... மேலும் பார்க்க

துணை முதல்வர் பதவி: `அண்ணன் துரைமுருகன் இருக்க வேண்டிய இடம் அதிமுக’ - எடப்பாடி பழனிசாமி சூசகம்

அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று (ஆகஸ்ட் 13) மாலை திருப்பத்தூர் மாவட்டத்தில் `மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருப்பத்... மேலும் பார்க்க