சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகா...
பல்லடத்தில் இன்று உழவா் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
உழவா் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) நடைபெறவுள்ளது.
உழவா் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளவா்கள் இந்த திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம், ஈமச்சடங்கு உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கு இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.
18 முதல் 65 வயது வரை அனைத்து குறு, சிறு விவசாயிகள், விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஊதியத்துக்கோ அல்லது குத்தகை அடிப்படையிலோ பணியில் ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து தொழிலாளா்கள் மற்றும் குத்தகைதாரா்கள் உழவா் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.