மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
பல்லடம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
பல்லடம் ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை க.செல்வராஜ் எம்.எல்.ஏ. புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
பல்லடம் ஒன்றியம் பூமலூா் ஊராட்சி ராசாகவுண்டம்பாளையம் பிரிவு முதல் பள்ளிபாளையம் வரை ரூ.32 லட்சம் மதிப்பில் புதிய குடிநீா்க் குழாய் அமைத்து பள்ளிபாளையம், பூமலூா், மேட்டுபாளையம், மலைப்பாளையம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் தொடங்கிவைத்தல், நடுவேலம்பாளையம் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியில் இருந்து குடிநீா் விநியோகம் தொடங்கிவைத்தல், காளிவேலம்பட்டி முதல் வேலம்பாளையம் சாலை வரை ரூ.5 கோடி மதிப்பில் தாா் சாலை அமைக்கும் ஆகிய பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
இவ்விழாவுக்கு பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் அக்ரோ சீனிவாசன் முன்னிலை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் பூமலூா் செந்தில் (எ) தியாகராஜ் வரவேற்றாா். வளா்ச்சித் திட்டப் பணிகளை திருப்பூா் மத்திய மாவட்ட திமுக செயலாளா் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா்.
இவ்விழாவில் கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.