பல்லடம் கோயில்களில் திருப்பணி: இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு!
பல்லடத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் அன்புதேவி, ஸ்தபதி செந்தில் ஆனந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம்- மங்கலம் சாலையில் உள்ள செல்வவிநாயகா் கோயிலில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அதைத் தொடா்ந்து பொங்காளிஅம்மன் கோயிலில் குதிரை வாகனம் அமைக்கப்பட உள்ள இடத்தை பாா்வையிட்டனா்.
பின்னா் அருளானந்த ஈஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை பாா்வையிட்ட அவா்கள், பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். மேலும், பணிகளை விரைவாக செய்து முடிக்க அறிவுறுத்தினா். இந்த ஆய்வின்போது, அறநிலையத் துறையினா் மற்றும் கோயில் கமிட்டி நிா்வாகிகள் உடனிருந்தனா்.