செய்திகள் :

பல்லடம்: தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்; காதலனின் புகாரால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

post image

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி - தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞர் அதே கல்லூரியில் வித்யாவுடன் படித்து வருகிறார். மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெண்மணி வித்யாவின் வீட்டிற்கு பெண் கேட்டு வந்ததாகவும், பெண் கொடுக்க வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் சரவணன் சம்மதிக்கவில்லை என்றும் தெரிகிறது. மேலும், வெண்மணியுடனான காதலை கைவிடுமாறு தங்கை வித்யாவை சரவணன் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வித்யாவின் பெற்றோர்கள் கோயிலுக்குச் சென்ற நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வித்யாவின் மீது பீரோ விழுந்து தலையில் காயமடைந்த நிலையில் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து காவல்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் வித்யாவின் நண்பர்களைக் கூட பார்க்க அனுமதிக்காமல் உடலை அருகில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.

இதனிடையே வித்யாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது காதலன் வெண்மணி என்பவர் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் காமநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய போலீஸார் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினர். முதற்கட்டமாக உயிரிழந்த வித்யாவின் பெற்றோரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை பேராசிரியர் மருத்துவர் குகன், உதவி பேராசிரியர் மருத்துவர் முத்துக்குமார் ஆகியோர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ள வித்யாவின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

அதில், தலையில் அடித்து வித்யா கொலை செய்யப்பட்டிருப்பது உறதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

க்ரைம்

அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வித்தியாவுக்கும், அவரது சகோதரர் சரவணனக்கும் இடையே காதல் விவகாரம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, வெண்மணியுடனான காதலை கைவிடுமாறு வித்யாவை சரவணன் மிரட்டியுள்ளார். ஆனால், வித்யா அதற்கு மறுப்புத் தெரிவித்ததால், அரிவாளின் கைப்பிடியில் வித்யாவின் தலையில் சரவணன் தாக்கியுள்ளார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த வித்யா அதிகமான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர். பீரோ விழுந்து வித்யா உயிரிழந்துவிட்டதாக சரவணன் நாடகமாடியுள்ளார். இதைத் தொடர்ந்து. சரவணனை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்தக் கொலையில் வித்யாவின் பெற்றோர் மற்றும் வேறுயாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மாற்று சமூக இளைஞரை காதலித்ததற்காக இளம் பெண்ணை அண்ணனே அடித்துக் கொலை செய்த கொடூரம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

அரசுப் பள்ளிக் கட்டடத்தில் இளம்பெண்ணுடன் இரவில் தங்கிய போதை இளைஞர்! - திருச்சி அதிர்ச்சி

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து வாளாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பள்ளி வளாகத்தின் பின... மேலும் பார்க்க

கரூர்: 'கழிவறைக்குச் செல்ல மாணவிகளுக்கு தனி பதிவேடு!' - சர்ச்சையில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோயம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்வடிவு. இவர், பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்கு கால... மேலும் பார்க்க

மோசடி புகார்: `கோ ஃபிரீ சைக்கிள்’ அலுவலகத்துக்கு சீல்; வங்கிக் கணக்குகளை முடக்கிய அமைலாக்கத்துறை!

முதலீட்டு மோசடி புகார்அயல் நாடுகள் மற்றும் அயல் மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள், இ-பைக், ஆட்டோ, ரிக்‌ஷா, வாடகை இருசக்கர வாகனங்கள் போன்றவற்றின் மூலம் சுற்றுலாத்தலங்களை பார்வை... மேலும் பார்க்க

தொழிலாளி அடித்துக் கொலை; 9 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை; 25 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட தீர்ப்பு!

தூத்துக்குடி அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். உப்பளத் தொழிலாளியான இவர், கடந்த 1999-ம் ஆண்டு தூத்துக்குடி ரூரல் பஞ்சாயத்து உறுப்பினராகவும், அலங்காரத்தட்டு ஊர்த் தலைவராகவும் இருந்து வந்தா... மேலும் பார்க்க

``நவராத்திரியில் மாதவிடாய்; விரதம் இருக்க முடியவில்லை..'' - மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த பெண்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் பிரியன்ஷா சோனி (36). ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். கடந்த 30-ம் தேதி வசந்த நவராத்திரி விழா தொடங்கியது. வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட முடிவு... மேலும் பார்க்க

வாட்ஸ்அப்க்கு வந்த இன்ஸ்டா லிங்க் - ரூ.150க்கு ஆசைப்பட்டு ரூ.61 லட்சத்தை இழந்த மராத்தி நடிகர்!

நாட்டில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த மோசடியில் பொதுமக்கள் தொடர்ந்து கோடிக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அந்த பட்டியலில் மராத்தி நடிகர் சாகர் கராண்டே என்பவரும... மேலும் பார்க்க