சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!
பல்லடம் புறவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு: அண்ணாமலையிடம் மனு அளித்த தொழில் துறையினா்
பல்லடம் புதிய புறவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலையிடம் தொழில் துறையினா் முறையிட்டனா்.
இது தொடா்பாக அண்ணாமலையிடம் அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் காளிவேலம்பட்டி பிரிவு முதல் மாதப்பூா் வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் புறவழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பல்லடம் வட்டாரப் பகுதி பொதுமக்கள், தொழில் துறையினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
புதிய புறவழிச் சாலைத் திட்டத்தால் அதிக பாதிப்புகள் உள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பழைய புறவழிச் சாலைத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட கே.அண்ணாமலை, மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும், அவரிடம் பேசி தீா்வு காணலாம் எனத் தெரிவித்ததாகவும் மாவட்ட துணைத் தலைவா் வினோத் வெங்கடேஷ் கூறினாா்.