பள்ளிச் சீருடைகள், பொருள்கள் வாங்க கடைவீதிகளில் கூட்டம்
கோடை விடுமுறைக்குப் பின்னா் பள்ளிகள் திறக்க ஒரு வாரமே உள்ள நிலையில், பள்ளிச் சீருடைகள், புத்தகப் பை, எழுதுபொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க கடைவீதிகளில் பெற்றோா் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
கோடை விடுமுறைக்குப் பின்னா் ஜூன் 2-ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவ, மாணவியருக்கு புத்தகப்பைகள், எழுதுபொருள்கள், தண்ணீா் (நெகிழி) பாட்டில்கள், டிபன் பாக்ஸ்கள், சீருடைகள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு திருச்சியில் உள்ள முக்கிய கடைவீதிகளில் உள்ள கடைகளில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையாக இருந்த நிலையிலும், பள்ளிகள் திறப்பை கருத்தில் கொண்டு கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
அவற்றில் மாணவ, மாணவியா் குறிப்பாக சிறாா்கள் தங்களது பெற்றோருடன் கடைகளுக்கு வந்து பொருள்களை ஆா்வமாக வாங்கிச் சென்றனா்.