``இந்தியை இப்படித்தான் கற்றுக் கொண்டேன்'' - ஏ.ஆர்.ரஹ்மான் ஷேரிங்ஸ்
பள்ளி கழிவறையில் பதுங்கி இருந்து 7 வயது மாணவி பாலியல் வன்கொடுமை - ராஜஸ்தானில் அதிர்ச்சி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 7 வயது பள்ளி மாணவி கழிவறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அம்மாணவி கழிவறைக்கு சென்றபோது அங்கு மறைந்திருந்த நபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஆசிரியையிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் பள்ளி தடுப்பு சுவர் அருகில் வசித்து வந்தது தெரிய வந்தது.

அவரை போலீஸார் கைது செய்து தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி அளித்த பேட்டியில், ''சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் பள்ளி சுவர் ஏறி குதித்து பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த கழிவறையில் மறைந்து இருந்தார். கழிவறைக்குள் நுழைந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு எப்படி வந்தாரோ அதே போன்று சுவர் ஏறி குதித்து வெளியில் குதித்து தப்பிச்சென்றுவிட்டார். பள்ளி சுவருக்கு அருகில் வசித்து வந்த நபரை பிடித்து விசாரித்து வருகிறோம். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்''என்று தெரிவித்தார்.
இது குறித்து முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் அளித்த பேட்டியில், ''7 வயது மாணவி பள்ளியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் இருந்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று தெரிகிறது. மாநிலத்தின் தலைநகரில் இருக்கும் பள்ளியில் கூட மாணவிக்கு பாதுகாப்பு இல்லையென்றால் வேறு எங்கே பாதுகாப்பு இருக்கப்போகிறது” என்று கேள்வி எழுப்பினார்.