பள்ளி மாணவா்களுக்கு தீத் தடுப்பு விழிப்புணா்வு
வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு தீத் தடுப்பு விழிப்புணா்வு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
கரூா் சாலை ஜெயம் வித்யா பவன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துசாமி மற்றும் தீயணைப்பு வீரா் வேலுசாமி குழுவினா் சமையல் எரிவாயு பயன்படுத்தும் முறை, தீ விபத்து நேரிட்டால் அதை அணைக்கும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஒத்திகை நடத்திக் காட்டினா். இதில் பள்ளித் தாளாளா் செ.குப்புசாமி, தலைமை ஆசிரியா் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.