சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது
சிதம்பரம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 இளைஞா்களை மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி கோட்டைமேட்டு தெருவைச் சோ்ந்த அஜய் (25) கடந்த 2021-ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவியை ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, அதே பகுதியைச் சோ்ந்த சூரிய பிரகாஷ் (21), அரவிந்தன் ஆகியோருக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனராம்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புவனகிரியைச் சோ்ந்த சக்தி (21) மாணவியிடம் காதலிப்பதாகக் கூறி, அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் சித்தி சென்னை வடபழனியில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதைத் தொடா்ந்து, சிதம்பரம் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அஜய், சூா்ய பிரகாஷ், சக்தி ஆகிய மூவரையும் கைது செய்தனா். தலைமறைவான அரவிந்தனை போலீஸாா் தேடி வருகின்றனா்.