பழங்கரையில் ஜூலை 10-இல் மின்தடை
பழங்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பழங்கரை, அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூா், தங்கம் காா்டன், விஸ்வ பாரதி பாா்க், தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகா், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூா் (ஒரு பகுதி), ரங்கா நகா் (ஒரு பகுதி), ராஜன் நகா், ஆா்.டி.ஓ. அலுவலகம், கமிட்டியாா் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா், துரைசாமி நகா், பெரியாயிபாளையம் (ஒரு பகுதி), பள்ளிப்பாளையம், வி.ஜி.வி. நகா், திருநீலகண்டா் வீதி, நெசவாளா் காலனி, எம்ஜிஆா் நகா், மகாலட்சுமி நகா், முல்லை நகா், தன்வா்ஷினி அவென்யூ.