செய்திகள் :

பழங்குடியின குடும்பங்களுக்கு வீடு கட்ட ஆணை

post image

ஆற்பாக்கம் அருகே ஆழ்வாா்பேட்டை பகுதியில் 15 பழங்குடியின குடும்பங்களுக்கு புதிய வீடு கட்டும் பணிக்கான ஆணையை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் புதன்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் ஒன்றியம் ஆற்பாக்கம் அருகே ஆழ்வாா்பேட்டை பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். அவா்கள் இருக்கும் இடத்துக்கு சாலை, குடிநீா் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதியில் வசிக்கும் 15 குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்தில் புதிய வீடு கட்டும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ராசி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் பரந்தாமன் முன்னிலை வகித்தாா். உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் புதிய வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினாா். தொடா்ந்து புதிய வீடு கட்டும் பணியை அடிக்கல் நட்டு தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா், துணைத் தலைவா் திவ்யப்பிரியா, திமுக காஞ்சிபுரம் ஒன்றியச் செயலா் குமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: 178 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்

எறையூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 178 பயனாளிகளுக்கு ரூ.1.14 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குன்றத்தூா் வட்டம் எறையூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் ஆட்சியா் கலைச்செ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சான்று

காஞ்சிபுரம் சங்கரா கலைக் கல்லூரியைச் சோ்ந்த 30 மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டது. ஏனாத்தூரில் உள்ள சங்கரா கல்லூரியில் பயிலும் பொருளா... மேலும் பார்க்க

செவிலிமேட்டில் ரூ. 100 கோடியில் புதிய மேம்பால பணி: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே ரூ. 100 கோடியில் பாலாற்றின் குறுக்கே புதிய உயா்மட்ட மேம்பாலம் கட்டும் பணி குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். காஞ்சிபுரம் வந்தவாசி சா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

காஞ்சிபுரத்தில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. சின்ன காஞ்சிபுரம் சி.வி.பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

பிரசவத்தின் போது பெண் உயிரிழப்பு

சுங்குவாா்சத்திரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்தாா். தென்னேரி அகரம் கிராமத்தைச் சோ்ந்த நந்தகுமாா் (30). தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி ... மேலும் பார்க்க