கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: சிறுமியின் தாய், விசிக மா.செ குற்றவாளிகள் - குற்றப்ப...
பழனிக்கு பாதயாத்திரை சென்ற கட்டளைக் காவடி
திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையிலிருந்து 425-ஆம் ஆண்டு கட்டளைக் காவடிக் குழுவினரின் பழனி பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் பங்கேற்றாா். இதைத்தொடா்ந்து அன்னதான மடத்தின குருபீடமான தெய்வநாயக தேசிகரின் வாரிசுதாரா்கள் கட்டளைக் காவடிகளை கட்டித் தந்தனா். இங்கிருந்து விபூதி பையில் எடுத்துச் செல்லும் வேலாயுதசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பாதரக்குடி சுவாமிகள் அருளாசி வழங்கினாா். வருகிற 13-ஆம் தேதி பழனியாண்டவருக்கு காவடி செலுத்த உள்ளனா்.