செய்திகள் :

பழனி: பூட்டி கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை; அவதிக்குள்ளாகும் மகளிர்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

post image

பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையானது பூட்டிய நிலையில் காணப்படுகின்றது.

பெண்கள் பணி நிமித்தமாகவும் பயணங்கள் மேற்கொள்ளும் போதும் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பொழுது அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தங்களுடைய குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கான இடம் தேவைப்படுகிறது. அதற்காக 2015-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பல்வேறு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறந்து வைத்தார். அதோடு பராமரிப்பிற்காக ஒரு ஊழியரையும் நியமித்தார். ஆனால் இந்த அறைகளின் தற்போதைய நிலை வேதனைக்குரியதாக இருக்கிறது.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயில், மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். நாள்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக இது விளங்குகிறது. அதுவும் குறிப்பாக விழா காலங்களில் அதிகஅளவிலான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இதனால் பழனி மலைக்கோயில் மட்டுமல்ல பழனி பேருந்து நிலையமும் எப்போதும் பயணிகளால் நிரம்பியபடியே காணப்படும். இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு வருகை புரியும் பாலூட்டும் தாய்மார்களுக்கான சூழல் முறையாக இருக்கிறதா என்று கேட்டால், அது கேள்விக்குறிதான்.

பழனி வ. உ. சி. மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையானது கடந்த சில மாதங்களாக பூட்டிய நிலையில் மட்டுமே இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இந்த அறையின் முன்பு சிலர் குடித்துவிட்டு படுத்து உறங்குகின்றனர். மது பாட்டில்களையும் ஆங்காங்கே வைத்துவிட்டுச் செல்கின்றனர். முகம் சுளிக்கும்படியான போதை ஆசாமிகளின் செயல்கள் பெண்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் இந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையானது திறக்கப்பட்டாலும் இங்கே வருவதற்கு பெண்கள் அச்சப்படுவார்கள்.

எனவே முதலில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி, அதன் பிறகு இந்த அறையையும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தாய்மார்கள் கோரிக்கை வைக்கின்றனர். அருகாமையில் உள்ள பயணிகள் ஓய்வறையும் தகுந்த பராமரிப்பின்றி காணப்படுகிறது. இவற்றை உடனே சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நான்கு மாதங்களுக்கு முன்புதான் இந்த பேருந்து நிலையத்தில் புதிதாக வணிக வளாகங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு, தமிழக முதல்வரால் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Seeman: ``சீமான் கண்ணியத்தைக் காக்கத் தவறிவிட்டார்... நடந்தது இதுதான்'' - பபாசி நிர்வாகிகள் காட்டம்

நூல் வெளியீட்டு விழாவில் சீமான்சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 48-வது புத்தகக் கண்காட்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.இதில் கடந்த ஜனவரி 4-ம் தேதி 'தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?' என்ற... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்து; சுட்டிக்காட்டிய விகடன்- நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் அருகே, நான்குவழிச் சாலை அமைத்துக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், சென்னை செல்ல வாகன ஓட்டி... மேலும் பார்க்க

OYO: திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி அனுமதி இல்லை; 'ஓயோ'-வின் திடீர் நடவடிக்கைக்குக் காரணம் இதுதான்!

இந்தியா முழுவதும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் பல தங்கும் விடுதிகளை நடத்தி வருகிறது பிரபல 'OYO' நிறுவனம்.திருமணமாகாதவர்கள், நண்பர்கள், காதலர்கள் என எல்லோருக்கும் அனுமதி வழங்கி வந்தது 'OYO'... மேலும் பார்க்க

GST: ரூ.40 லட்சம் வருமானம்... பானிபூரி விற்பவருக்கு வந்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்! - என்ன நடந்தது?

தமிழ்நாட்டைச் சேர்ந்த பானிபூரி விற்பனையாளர் ஒருவருக்கு ஜி.எஸ்.டி (GST) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பானிபூரி விற்றதின் மூலம் அந்தப் பானிபூரி விற்பனையாளரின் ஆண்டு ... மேலும் பார்க்க

M K Stalin: `சிந்துவெளி எழுத்து முறை; ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு' - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்துப் பேசிய ஸ்டாலின், "சிந்துவெளி நா... மேலும் பார்க்க