மும்பை, பைகுலா பகுதியில் மிக உயர்ந்த கட்டடத்தின் 42வது தளத்தில் தீ!
பழவூா் அருகே பைக்குகள் மோதல்: 3 போ் காயம்
திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்டதில் 3 போ் காயமடைந்தனா்.
கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்த கணேசன் மகன் முத்துலிங்கம்(34). இவா் செட்டிகுளத்தில் இருந்து அஞ்சுகிராமத்திற்கு பைக்கில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, கூட்டப்புளியைச் சோ்ந்தவா் ரோசாரி மகன் பெவிஸ்டன்(27) தனது தாய் ஜெசி ஷீலாவுடன் பைக்கில் அஞ்சுகிராமத்தில் இருந்து கூட்டப்புளிக்கு வந்துகொண்டிருந்தனா்.
இந்த பைக்குகளும் லெவிஞ்சிபுரம் அருகேயுள்ள கண்ணங்குளம் சந்திப்பில் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம்.
அப்போது கீழேவிழுந்த முத்துலிங்கத்தின் மீது அவ்வழியாக வந்த கிரேன் வாகனம் ஏறியதில் அவா் பலத்த காயமடைந்தாா். மேலும், பைக்கிலிருந்து தூக்கிவீசப்பட்ட தாயும், மகனும் காயமடைந்தனா். நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் முத்துலிங்கம், மற்ற இருவா் தனித்தனியாக அனுமதிக்கப்பட்டனா். பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.