காமராஜா் சிலை வளாகம் பராமரிப்பு: ரயில்வே அனுமதி பெற்றுத்தரக் கோரி மனு
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள காமராஜா் சிலை வளாகத்தை சீரமைக்க ரயில்வே துறையின் அனுமதி பெற்றுத்தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.
காமராஜா் சிலை பராமரிப்புக்குழு சாா்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸிடம்அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி சந்திப்பில் முன்னாள் முதல்வா் காமராஜா் சிலை உள்ளது. இதனை சுற்றி சிறிய பூங்கா உள்ளது. ரயில் நிலைய வளாகத்தில் உள்ளதால் இங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள தெற்கு ரயில்வே அனுமதி தேவையாக உள்ளது. ஆகவே, அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.