இரு மொழிக் கொள்கையால் வேலைவாய்ப்புகளை இழக்கும் இளைஞர்கள்: ஆளுநர் வேதனை
மானூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்
மானூா் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மானூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மேற்கு ஒன்றிய அவைத்தலைவா் காசி தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா் அன்பழகன் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ சிறப்புரையாற்றினாா். துணை மேயா் கே.ஆா். ராஜு, வழக்குரைஞா் தினேஷ், அமிதாப், பிரேம்நசீா், மானூா் ஊராட்சி ஒன்றிய தலைவா் ஸ்ரீலேகா, துணைத் தலைவா் கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதிகள் அந்தோணி ஜேம்ஸ், வின்சென்ட், பீா் முகமது, ஒன்றிய பொருளாளா் இஸ்மாயில் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியைத் திணிக்க முயலும் மத்திய பாஜக அரசைக் கண்டிப்பது, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மானூா் சுற்றுவட்டார கிராமங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடுவது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.