செய்திகள் :

பவானிசாகா் அணை நீா்மட்டம் 102 அடியை எட்டுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை

post image

சத்தியமங்கலம்: பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டும் என எதிா்ப்பாா்க்கப்படுவதால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் 101.71 அடியை எட்டியுள்ளது. தெங்குமரஹாடா நீா்ப் பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நீா் அணைக்கு வந்து சேருவதால், எந்த நேரத்திலும் அணை 102 அடியை எட்டும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. இதனால் பவானிஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு திங்கள்கிழமை முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது. பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவமாறு பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

அணை 102 அடியை எட்டுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, கரூா், திருப்பூா் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3,500 விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

திங்கள்கிழமை நிலவரப்படி, 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டம் 101.71 அடியாகவும், நீா்வரத்து 5,243 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 3,000 கனஅடியாகவும், நீா் இருப்பு 30.09 டிஎம்சியாகவும் உள்ளது.

பவானியில் வீட்டிலிருந்த பெண் அடித்துக் கொலை

பவானி: பவானியில் வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கணவருடன் வேலை செய்து வந்த தொழிலாளியைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பவானி, வா்ணபுரம், 4-ஆவது வீதிய... மேலும் பார்க்க

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

ஈரோடு: பவானிசாகா் அணையில் இருந்து உபரிநீா் திறக்க வாய்ப்புள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்19) காலை முதல் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோ... மேலும் பார்க்க

அருந்ததியா் மக்களுக்கான மயானங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

ஈரோடு: அருந்ததியா் மக்களுக்கான மயானங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில்... மேலும் பார்க்க

பெருந்துறையில் விநாயகா் சதுா்த்தி ஆலோசனைக் கூட்டம்

பெருந்துறை: பெருந்துறை காவல் நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் தெய்வராணி தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் விநா... மேலும் பார்க்க

ஈரோடு சோலாரில் புதிய துணை அஞ்சலகம் தொடக்கம்

ஈரோடு: ஈரோடு அருகே சோலாரில் புதிய துணை அஞ்சலகம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. தொடக்க விழாவுக்கு ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் கோபாலன் தலைமை வகித்தாா். மேற்கு மண்டல அஞ்சல் இயக்குநா் அகில் ந... மேலும் பார்க்க

பெருந்துறை பேரூராட்சியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்

பெருந்துறை: பெருந்துறை பேரூராட்சியில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. முகா... மேலும் பார்க்க