`ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மாற்று எவரும் இல்லை' - அம்பத்தி ராயுடு
பெருந்துறையில் விநாயகா் சதுா்த்தி ஆலோசனைக் கூட்டம்
பெருந்துறை: பெருந்துறை காவல் நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் தெய்வராணி தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் விநாயகா் சிலைகள் வைக்கக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கக் கூடாது, கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. வழக்கமான பாதையில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.