Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
பவானியில் ரூ.47.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை
பவானி சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.47.50 லட்சத்தில் சாலை, மழைநீா் வடிகால் அமைக்க பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.சி.கருப்பணன், சிவகாமி நகா், சோ்வராயன்பாளையம், திப்பிசெட்டிபாளையம், சிவகாமி நகா், கூனக்காபாளையம் ஆகிய பகுதிகளில் தாா் சாலை, கான்கிரீட் சாலை, மழைநீா் வடிகால் அமைக்க ரூ.47.50 லட்சத்தை ஒதுக்கீடு செய்தாா். இதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா்கள் எஸ்.எம்.தங்கவேலு, பூங்கோதை வரதராஜ், மாவட்டக் குழு முன்னாள் உறுப்பினா் கே.கே.விஸ்வநாதன், தொட்டிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் எம்.செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.