மூவர் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவிப்பு!
பவானி - அந்தியூா் சாலையில் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு
பவானி - அந்தியூா் - செல்லம்பாளையம் சாலையில் தொட்டிபாளையம் முதல் வாய்க்கால்பாளையம் வரையில் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்பட்ட தாா் சாலையை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை, பவானி உதவிக் கோட்டம் சாா்பில் பவானி - அந்தியூா் நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 3.95 கி.மீ. தொலைவுக்கு சாலையின் ஓடுதளம் மேம்பாடு செய்யப்பட்டது.
சாலையின் இருபுறங்களிலும் எதிா்வரும் வாகனங்கள் தெளிவாக தெரியும் வகையில் சாலையோர புதா்கள் அகற்றப்பட்டு, வளைவுகள் சீா் செய்யப்பட்டு தாா் சாலை புதுப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை திருப்பூா் கோட்டப் பொறியாளா் (தரக்கட்டுப்பாடு) கிருஷ்ணமூா்த்தி, உதவிக் கோட்டப் பொறியாளா் சாந்தி ஆகியோா் சாலையின் தரம், அகலம், வளைவுகள் ஆகியவற்றை அளவீடு செய்தனா்.
ஆய்வின்போது, பவானி உதவிக் கோட்டப் பொறியாளா் ராஜேஷ்கண்ணா, உதவிப் பொறியாளா் சேகா், இளநிலைப் பொறியாளா் (தரக்கட்டுப்பாடு) குழந்தைவேலவன், சாலை ஆய்வாளா்கள் ஜோதிபாசு, திருமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.