காரைக்குடி: ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க 3 கி.மீ தூரம் நடந்து சென்ற முதல்வர் ஸ்...
பவானி அருகே பிடிபட்ட மலைப்பாம்பு
பவானியை அடுத்த சிங்கம்பேட்டை காவிரிக் கரையோரத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு, அடா்ந்த வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டது.
சிங்கம்பேட்டை கேட், காட்டூா் அருகே காவிரிக் கரையோரப் பகுதியில் மலைப்பாம்பு மெதுவாக ஊா்ந்து சென்றுள்ளது. இதைக் கண்ட அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், மலைப்பாம்பை லாவகமாக பிடித்ததோடு, சென்னம்பட்டி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வனத் துறையினா் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கூண்டில் அடைத்துச் சென்று, சென்னம்பட்டி வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.