செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளைப் போராளிகள் எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகம்

post image

நியூயார்க் டைம்ஸ் செய்தி ஊடகத்தில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போராளிகள் என்று குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் மட்டுமின்றி, பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட சர்வதேச செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை `போராளிகள்’ என்று குறிப்பிட்டது. நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தச் செயலுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, இது போராளிகளின் தாக்குதல் அல்ல; இது ஒரு தீவிரவாதத் தாக்குதலே. உங்கள் தவறை நாங்களே சரி செய்து விடுகிறோம். இந்தியாவாக இருந்தாலும் சரி, இஸ்ரேலாக இருந்தாலும் சரி. தீவிரவாதம் என்றால் தீவிரவாதம்தான். தீவிரவாதம் என்ற விஷயத்தில் மட்டும் உண்மையில் இருந்து நியூயார்க் டைம்ஸ் விலகி விடுகிறது என்று தெரிவித்தது.

போராளி என்பதற்கும் தீவிரவாதி என்பதற்கு பெரிய வித்தியாசம் உள்ளது. போராளிகள் என்பது அரசியல் அல்லது ஒரு சமூக மாற்றத்துக்காக கடுமையாகப் போராடும் கிளர்ச்சியாளர்களைக் குறிக்கும்.

ஆனால், தீவிரவாதிகள் என்பது நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவர்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து ஊடுருவி, தீவிரவாதத்தை ஏற்படுத்துவார்கள். இவர்கள் ஆயுதம் ஏந்தி, வன்முறையில் ஈடுபடுவதுடன், அப்பாவி மக்களையும் தாக்குவர்.

இதையும் படிக்க:'சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஓடும்' - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

ஹரியாணா: நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது வாகனம் மோதல்: 7 பேர் பலி

ஹரியாணாவில் நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது பிக்அப் வாகனம் மோதியதில் 7 பேர் பலியாகினர். ஹரியாணா மாநிலம், நுஹ் மாவட்டத்தில் உள்ள தில்லி-மும்பை விரைவுச் சாலையை 11 தூய்மைப் பணியாளர்கள் சனிக்கிழம... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற முர்மு

புனித பீட்டா் சதுக்கத்தில் நடந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை கலந்து கொண்டார்.இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

குப்வாராவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. இந... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயரில் பூங்கா! மேயர் அறிவிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்திலுள்ள பூங்கா மற்றும் சதுக்கத்திற்கு பெஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயர் சூட்டப்படும் என அந்நகர மேயர் அறிவித்துள்ளார். பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியது யார்?

பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக... மேலும் பார்க்க

கேரள தலைநகரிலுள்ள விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள பல்வேறு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்பட பல்வேறு விடுதிகளில் ஐ.ஈ.டி. எனப்படும் ... மேலும் பார்க்க