செய்திகள் :

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

post image

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

”இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவீத வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே மற்றொரு அறிவிப்பையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

“பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய எண்ணெய் சேமிப்புக் கிடங்கை பாகிஸ்தானில் மேம்படுத்தப் போகிறோம்.

இந்த கூட்டாண்மையை வழிநடத்தும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்கள் இருக்கிறோம். யாருக்குத் தெரியும், ஒருநாள் இந்தியாவுக்குகூட அவர்கள் எண்ணெய் விற்பனை செய்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வெள்ளை மாளிகையில் இந்தியாவுடனான ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப்,

“நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமெரிக்காவை அடிப்படையில் எதிர்க்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இருக்கிறது. டாலர் மீதான தாக்குதலை நடத்த யாரையும் அனுமதிக்கப் போவதில்லை.

பிரதமர் மோடி என்னுடைய நண்பர், ஆனால் வணிக ரீதியில் அவர்கள் அமெரிக்காவுடன் அதிகளவில் வியாபாரம் செய்வதில்லை. அவர்கள் எங்களிடம் நிறைய விற்கிறார்கள், ஆனால், நாங்கள் வாங்க விரும்பவில்லை. ஏனெனில் அதிக வரி விதிக்கப்படுகிறது. உலகில் மிக உயர்ந்த வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது.

தற்போது, வரியைக் கணிசமாகக் குறைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம். ஒப்பந்தம் நிறைவு பெறுமா அல்லது அதிக வரி விதிக்கப்படுமா என்பது இந்த வார இறுதியில் தெரியவரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

US President Donald Trump has said that India may have to buy oil from Pakistan.

இதையும் படிக்க : இந்திய பொருள்கள் மீது ஆக.1 முதல் 25% வரி- அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிப்பு

பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.ரஷியா வந்துள்ள பெலாரஸ் அத... மேலும் பார்க்க

இந்தியா மீதான 25% வரி ஆக.7 முதல் அமல்: எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி?

‘இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும்’ என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை வியாழக்கிழமை அறிவிப்... மேலும் பார்க்க

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் உணவு விநியோக மையங்களில் ஏற்படும் உயிரிழப்புகளால் சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: வெள்ளை மாளிகை வலியுறுத்தல்

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரின் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அதன் செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் (படம்) கூறியதாவது:இந... மேலும் பார்க்க

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டில் வாழும் இந்தியா்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.அயா்லாந்து தலைநகா் டப்லின் மற்றும் பி... மேலும் பார்க்க

மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!

உலக நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளின் விலைக்கு ஏற்ப, அமெரிக்காவிலும் மருந்துகளின் விலைகளைக் குறைக்குமாறு 17 மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார்... மேலும் பார்க்க