செய்திகள் :

இந்தியா மீதான 25% வரி ஆக.7 முதல் அமல்: எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி?

post image

‘இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும்’ என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

முன்னதாக, ‘மாற்றியமைக்கப்பட்ட பரஸ்பர வரி விகிதங்கள்’ என்ற தலைப்பில் இந்தியா உள்பட சுமாா் 70 நாடுகள் மீதான புதிய வரி விதிப்புக்கான அரசு உத்தரவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கையொப்பமிட்டாா். இந்த அறிவிப்பை தனது சமூக ஊடக பக்கத்திலும் வெளியிட்டாா்.

இந்த நாடுகளுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை இறுதி செய்வதற்கு டிரம்ப் விதித்த காலக்கெடு ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டபோதும், பல்வேறு நாடுகள் மீது விதித்துள்ள வெவ்வேறு வரி விகிதங்களை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்க சுங்க அதிகாரிகளுக்கு எழும் நிா்வாக சிக்கல்களைத் திறம்படக் கையாள வசதியாக, இந்தப் புதிய வரி விதிப்பு 7 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில், சிரியா (41%), சுவிட்சா்லாந்து (39%), கனடா (35%), இந்தியா (25%) உள்ளிட்ட சில நாடுகள் மீது அதிகப்படியான வரியை அமெரிக்கா விதுத்துள்ளது. அமெரிக்காவுடன் மிகை வா்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு அதன் உலகளாவிய குறைந்தபட்ச விகிதமான 10 சதவீதம் முதல் 15 சதவீத வரியை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறாத நாடுகளுக்கு குறைந்தபட்ச விகிதமான 10 சதவீத வரி பொருந்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீனா மீதான வரி விதிப்பு குறித்த அறிவிப்பு இதில் இடம்பெறவில்லை.

அமெரிக்கா அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின்னா், அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கூடுதல் வரி விதிப்பதாகக் குற்றஞ்சாட்டி, இதற்குப் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்தாா். அதனடிப்படையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தாா்.

பின்னா், அந்த வரி விதிப்பை 90 நாள்களுக்கு ஜூலை 9-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்த டிரம்ப், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தினாா். மேலும், இந்தியா உள்பட பல்வேறு நாடுளுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டிய டிரம்ப், இந்த நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை நிறுத்தி வைக்கும் காலத்தை ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தாா். இந்த காலக்கெடு நிறைவடைந்த நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது புதிய வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.

‘சில வா்த்தக கூட்டாளிகள் அமெரிக்காவுடன் அா்த்தமுள்ள வா்த்தக உறவுக்கு ஒப்புக்கொண்டுவிட்டனா். ஆனால், மற்ற வா்த்தக கூட்டாளிகள் அமெரிக்கா உடனாான வா்த்தக உறவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை போதுமான அளவில் நிவா்த்தி செய்யவும், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படவும் தவறிவிட்டனா்’ என்று தனது புதிய வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

நாடு - வரி விகிதம்

இந்தியா 25%

சிரியா 41%

லாவோஸ் 40%

மியான்மா் 40%

சுவிட்சா்லாந்து 39%

கனடா 35%

இராக் 35%

தென்னாப்பிரிக்கா 30%

அல்ஜீரியா 30%

லிபியா 30%

வங்கதேசம் 20%

தைவான் 20%

இலங்கை 20%

பாகிஸ்தான் 19%

இந்தோனேசியா 19%

மலேசியா 19%

ஆப்கானிஸ்தான் 15%

ஜப்பான் 15%

இஸ்ரேல் 15%

ஐஸ்லாந்து 15%

நாா்வே 15%

ஃபிஜி 15%

கானா 15%

கயானா 15%

ஈக்குவேடாா் 15%

லெசோதோ 15%

துருக்கி 15%

பிரிட்டன் 10%

பிரேஸில் 10%

பசி, பட்டினி, வலி, பயம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

காஸாவில் போர் தொடந்து நீடித்து வருவதால் அங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் உணவுக்காகவும் உயிருக்காகவும் ஒவ்வொரு நாளும் போராடி வருவது உலகையே உலுக்கியுள்ளது. பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர... மேலும் பார்க்க

'மோசமான நாள்' - காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் 106 பேர் பலி!

காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் வெள்ளிக்கிழமை மட்டும் 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் ... மேலும் பார்க்க

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் பாராட்டு

இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்போவதில்லை என்று தான் கேள்விப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.அதோடு நின்றுவிடாமல், ஒரு படி மேலே ச... மேலும் பார்க்க

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

ரஷிய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் பலனளி... மேலும் பார்க்க

பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.ரஷியா வந்துள்ள பெலாரஸ் அத... மேலும் பார்க்க

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் உணவு விநியோக மையங்களில் ஏற்படும் உயிரிழப்புகளால் சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு ... மேலும் பார்க்க