செய்திகள் :

`பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லையா?’ - நெறியாளர் கேள்விகள்; நேரலையில் திணறிய பாக்., அமைச்சர்

post image

பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் ”ஆப்பரேஷன் சிந்தூர்” எனும் தாக்குதலை நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் 9 இலக்குகள் குறைவைத்து தாக்கப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்தது. இந்த நிலையில் பாகிஸ்தானின் அமைச்சர் sky news க்கு அளித்த நேர்காணல் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் போர் நிலவரங்கள் குறித்து ஸ்கை நியூஸ் நெறியாளர் யால்டா ஹக்கீம்(Yalda Hakim) பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தாராரிடம்(Attaullah Tarar) காணொலி காட்சி மூலம் கேள்வி எழுப்பினார்.

pic courtesy

`பாகிஸ்தானில் எந்த பயங்கரவாத முகாம்களும் இல்லை’

அதில், ``இந்தியா, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை பயங்கரவாத முகாம்கள் மீதுதான் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறுகின்றதே..?” என கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதில் கூறிய பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தாரார், ”நான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன், பாகிஸ்தானில் எந்த பயங்கரவாத முகாம்களும் இல்லை.

இன்னும் சொல்ல போனால், பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. எங்களின் எல்லைகளில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னணி நாடாக நாங்கள் இருக்கிறோம்” என கூறினார் .

இதில் எது உண்மை?

அப்போது குறுக்கிட்ட நெறியாளர் யால்டா ஹக்கீம், ``ஒரு வாரத்திற்கு முன்பு, எனது நிகழ்ச்சியில், உங்கள்(பாகிஸ்தான்) பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், `பாகிஸ்தான் பல தசாப்தங்களாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்தல், ஆதரவளித்தல் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளாகப் செயல்படுதல் ஆகியவற்றைக் கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டார். உண்மையில், 2018 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டி, பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை நிறுத்தினார்.

எனவே, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லை என்று நீங்கள் கூறும்போது, ​​அது ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் கூறியதற்கும், பெனாசிர் பூட்டோ கூறியதற்கும், உங்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒரு வாரத்திற்கு முன்பு என்னிடம் கூறியதற்கும் முரணாக இருக்கிறது. இதில் எது உண்மை?

உண்மையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதும் ஆதரிப்பதும் பாகிஸ்தானின் வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது, இருந்திருக்கிறது என்று பிலாவல் பூட்டோ சில நாட்களுக்கு முன்பு என்னிடம் கூறினார்.” எனத் தெரிவித்தார்.

இதில் எது உண்மை என்பது போன்ற கேள்விகளை நெறியாளர் ஹக்கீம் முன்வைக்க, பாகிஸ்தான் அமைச்சர் சற்று திணறி, `9/11 தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் ஒரு முன்னணி நாடாக இருக்கிறது.’ என சமாளித்ததோடு, நீங்கள் பாகிஸ்தான் வந்து பார்க்க வேண்டும். அப்போது தான் உண்மை தெரியும் என்றார்.

அதற்கும் நெறியாளர் ஹக்கீம், ``நான் பாகிஸ்தானுக்குச் வந்திருக்கிறேன். ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டதையும் நாங்கள் அறிவோம்.” என்று பதிலளித்தார். இதனால் நேரலையில் பாகிஸ்தான் அமைச்சர் தாரார் பதில் அளிக்க முடியாமல் திணறினார்.

பீடி இலை பறிக்கச் சென்ற பழங்குடியினப் பெண்கள் `புலி' தாக்கி இறப்பு... மகாராஷ்டிராவில் சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம், சந்திராப்பூரில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் விறகு எடுக்க அடிக்கடி வனப்பகுதிக்குள் செல்வதுண்டு. அங்குள்ள சிந்தேவாஹி வனப்பகுதி அருகில் இருக்கும்... மேலும் பார்க்க

Miyazaki Mango: வைரத்திற்கு நிகரான விலையில் விற்கப்படும் மியாசாகி மாம்பழங்கள் - அப்படி என்ன ஸ்பெஷல்?

ஜப்பான் நாட்டில், மியாசாகி மாம்பழங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.நாடு முழுவதும் கோடை காலத்தில் மாம்பழங்களுக்கான சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜப்பானில் உள்ள மியாசாகி மாம்பழம் மிகவும்... மேலும் பார்க்க

Yalda Hakim: பாகிஸ்தான் அமைச்சர்களை நேரலையில் அலறவிட்ட நிருபர் - யார் இந்த யால்டா ஹக்கீம்?

ஆப்கானிஸ்தானை சேர்ந்த யால்டா ஹக்கீம், மூத்த பாகிஸ்தான் அதிகாரிகளுடனான தனது அதிரடியான, தயக்கமற்ற நேர்காணல்களுக்காக பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார். ‘ஸ்கை நியூஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் யால்டா ஹக்கீம் சம... மேலும் பார்க்க

India - Pakistan : `பாகிஸ்தானின் சீக்கிய தலம் மீது தாக்குதலா?’ - மறுத்த இந்திய அரசு | Fact check

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலமான நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள், 26 பேரை சுட்... மேலும் பார்க்க

`சீனர்களிடம் எங்களை விற்றுவிட்டனர்’ - லாவோஸ் சைபர் கிரைம் கும்பலிடமிருந்து தப்பியவர்கள் கண்ணீர்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏராளமான இணையத்தள குற்றங்கள் நடக்கிறது. இந்த இணையத்தள குற்றங்களை நடத்துபவர்கள் ஒரு நாட்டில் இருந்து கொண்டு மற்றொரு நாட்டில் செயல்படுகின்றனர். இதனால் அவர்களை கைது செய்வது எ... மேலும் பார்க்க

Murali Naik: "காலையில்தான் எங்களிடம் பேசினான்" - பாகிஸ்தான் தாக்குதலில் மகனை இழந்த பெற்றோர் உருக்கம்

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த முரளி நாயக்(23) என்ற வீரர் வீர மரணம் அடைந்தார்.முரளி நாயக் பெற்றோருக்குச் சொந்த ஊர் ஆந்திரா மாநிலத்தில் உள்ளது. அவரது தந்தை ஸ்ரீர... மேலும் பார்க்க