செய்திகள் :

பாகிஸ்தான் நடிகை நடித்ததால் தடைசெய்யப்பட்ட பஞ்சாபி திரைப்படம்? படக்குழுவுக்கு 40% இழப்பு!

post image

பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமிர் நடித்ததால் பஞ்சாபி சர்தார் ஜி 3 என்ற திரைப்படம் இந்தியாவில் வெளியாகாமல் வெளிநாட்டில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.

அமர் ஹுண்டல் இயக்கிய இந்தப் படத்தில் பஞ்சாபி நடிகர் தில்ஜித் தோசன்ஜ் நடித்துள்ளார். இவரது அமர் சிங் சம்கீலா படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

சர்தார் ஜி 3 படத்தில் நடிகைகள் நீரு பஜ்வா, ஜாஸ்மின் பஜ்வா, ஹனியா ஆமிர் நடித்துள்ளார்கள்.

இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹனியா ஆமீர் இந்தியா, பாகிஸ்தான் போரின்போது ஆபரேஷன் சிந்தூரை இழிவுப்படுத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஏற்கெனவே, பாகிஸ்தான் பிரபலங்களின் இன்ஸ்டா பக்கங்களை இந்தியாவில் இருந்து முடக்கியிருந்தார்கள். இருப்பினும் அவரது இந்தப் பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் பதிவினால் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கள் பாகிஸ்தான் நாட்டு கலைஞர்களை இந்திய சினிமாக்களில் நடிக்க தடை விதித்தது.

சர்தார் ஜி 3 திரைப்படம் இன்று (ஜூன்.27) திரைக்கு வந்திருக்க வேண்டியது. பாகிஸ்தான் நடிகை பேசியதால் அந்தப் படம் வெளிநாடுகளில் மட்டுமே திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் பேசுகையில், “அரசாங்கள் எதுவும் கூறவில்லை. ஆனால், மக்களின் மனம் புண்படுமென்பதால் இப்படி செய்தோம். டிரைலரைக் கூட இந்தியாவில் வெளிவிடவில்லை. நடிகை சிந்தித்து பேசியிருக்க வேண்டும். இதனால் எங்களுக்கு 40% இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

நடிகர் தில்ஜித் தோசன்ஜ், “நாங்கள் பிப்ரவரியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம். அப்போது, எந்தப் பிரச்னையும் இல்லை. வெளிநாடுகளில் படத்தை வெளியிட தயாரிப்பாளருக்கு உதவுகிறேன்.

ஹனியா ஆமிர் தொழில்முறையில் சிறப்பான நடிகை. நான் இண்ட்ரோவர்ட் என்பதால் யாருடனும் பெரிதாக கலந்து பேசுவதில்லை” என்றார்.

இந்தப் படத்தில் நடித்த நடிகை நீரு பஜ்வா தனது சமூக வலைதள பக்கங்களில் இந்தப் படத்தின் சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார்.

இந்தப் பிரச்னையால் பார்டர் 2 படத்தில் இருந்து நடிகர் தில்ஜித் தோசன்ஜை நீக்குவதா என பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

summary

The Punjabi film Sardar Zee 3, starring Pakistani actress Haniya Aamir, was not released in India and was only screened abroad.

வெளியானது ‘பீனிக்ஸ்’ பட டிரைலர்

விஜய் சேதுபதி மகன் நாயகனாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’. இந்த படத்தை சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு ... மேலும் பார்க்க

உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை- பிரக்ஞானந்தா சாம்பியன்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் தொடரில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.உஸ்செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் 2025 தொடரின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றத... மேலும் பார்க்க

பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை - புகைப்படங்கள்

உலக புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் திருவீதி உலா வந்த பகவான் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் சிலைகள்.பூரியில் வருடாந்திர ரத யாத்திரை விழாவின் ஒரு பகுதியாக பகவான் ஜெகந்நாதரின் சிலை சுமந்... மேலும் பார்க்க

30 வயதுக்கு மேலும் மணமாகவில்லையா? லவ் மேரேஜ் - திரை விமர்சனம்!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான லவ் மேரேஜ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நாடுமுழுக்க நடக்கும் கதைகளில் ஒன்றுதான் படத்தின் கதை. நாயகன் விக்ரம் பிரபுவுக்கு 30 வயதைக் கடந்தும் த... மேலும் பார்க்க

தீபாவளிக்கு வெளியாகும் லெஜண்ட் சரவணனின் புதிய படம்!

பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணனின் புதிய திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையின்போது திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.லெஜண்ட் சரவணன், கதாநாயகனாக அறிமுகமான “தி லெஜண்ட்” என... மேலும் பார்க்க