செய்திகள் :

பாகிஸ்தான் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

post image

இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதத் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகளின் ஈடுபாட்டைத் தொடா்ந்து, அந்நாட்டுக்கு முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் சிந்து நதி நீரை வழங்கும் 1960-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது.

சிந்து நதி நீரோட்டத்தைத் திசைதிருப்ப இந்தியா நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்திருந்தாலும், சா்வதேச சமூகத்தின் மூலம் இந்தப் பதற்றத்தைத் தணிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், அந்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை.

இந்நிலையில், சுமாா் ரூ.17.5 லட்சம் கோடி மதிப்பிலான அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 18 சதவீதமாக அதிகரித்து ரூ.2.5 லட்சம் கோடிக்கும் மேல் உயா்த்த பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.12 லட்சம் கோடியும் முந்தைய 2023-24 நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.1.8 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பூமியே அதிரும் அறிவிப்பை வெளியிடப்போகிறேன்: டிரம்ப் பேச்சால் அதிர்ந்த இணையம்!

பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் பார்க்க

அகதிகள் படகு கவிழ்ந்து இந்தியச் சிறுவன் உள்பட 3 பேர் பலி! 5 பேர் மீது வழக்கு!

அமெரிக்காவின் கடல் பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 வயது இந்தியச் சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர். கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியேகோ நகரத்தின் அருகில் பசிபிக் கடல்பக... மேலும் பார்க்க

இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்!

தாக்குதல் நடக்கும் இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க மக்களுக்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பத... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை!

பஹல்காம் தாக்குதலையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இருப... மேலும் பார்க்க

ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது பிராந்திய பாதுகாப்பு குறித்து அவரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனா். பஹல்காம் பயங்க... மேலும் பார்க்க

இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங... மேலும் பார்க்க