செய்திகள் :

பாகுபலி மறுவெளியீட்டுத் தேதி!

post image

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் பாகுபலி. கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் இந்திய சினிமாவின் தரத்தையும் உயர்த்தியது.

கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? என்ற பெரும் ஆவலுடன் முடிக்கப்பட்டு பார்வையாளர்களை ஏங்கச் செய்த ‘பாகுபலி’ முதல் பாகத்தால் இரண்டாம் பாகமும் ரூ. 1800 கோடி வரை வசூலைக் குவித்து மாபெரும் வணிக வெற்றிப்படமானது.

இந்த நிலையில் இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பாகுபலி 1 & 2 பாகங்களை இணைத்து வருகிற அக். 31 ஆம் தேதி மறுவெளியீட செய்ய உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: விவாகரத்தா? நயன்தாரா பதில்!

director ss rajamouli bahubali 1 and 2 re-release date announced

முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தனது முன்னாள் மனைவி உடனான விவாகரத்து குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். அதில், மனைவிக்கு இருந்த புற்றுநோய் குறித்து முதல்முறையாகப் பேசியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் 2009-இல் வெண்... மேலும் பார்க்க

ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் யானிக் சின்னர், கார்லோஸ் அல்கராஸ் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்கள். புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் ஜூன் 23 முதல் தொடங்கி ஜூலை 13... மேலும் பார்க்க

தனுஷ் 54 படத்தின் பூஜை விடியோ..! நாயகியாக மமிதா பைஜூ!

நடிகர் தனுஷின் 54-ஆவது படப் பூஜையின் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் - விக்னேஷ் ராஜா படத்தின் படப்பிடிப்பு ஜூலை 10ஆம் தேதி துவங்கியதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் தனுஷ் இறுதியாக... மேலும் பார்க்க

திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!

நடிகை ஷ்ருதி ஹாசன் சமீபத்திய நேர்காணலில் திருமணம் என்பது சாதாரண விஷயமில்லை அதில் தனக்குப் பயமாக இருப்பதாகக் கூறியுள்ளார். சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தில் அறிமுகமான நடிகை ஷ்ருதி ஹாசன் (39 வயது) தற்போது... மேலும் பார்க்க

டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மோனிகா பாடல்..! தொடரும் பூஜா ஹெக்டேவின் ஆதிக்கம்!

நடிகை பூஜா ஹெக்டே நடனத்தில் வெளியான கூலி திரைப்படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்... மேலும் பார்க்க

முதல் டி20: இலங்கை வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் சோ்க்க, இலங்கை 19 ஓவா்களில்... மேலும் பார்க்க