செய்திகள் :

பாஜகவினரின் குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன் -ஆ.ராசா பேட்டி

post image

அமித் ஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் ஆ.ராசா பேசியதைக் கண்டித்து பாஜகவினா் புகாா் அளித்த நிலையில் வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என ஆ.ராசா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளை பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்குத் திறந்து வைத்த நிகழ்ச்சியில் வியாழக்கிழமை கலந்து கொண்டாா். தாளவாடி ரங்கசாமி கோயில் அருகே ரூ.90 லட்சம் செலவில் தாா்சாலைக்கான பூமிபூஜை, தாளவாடியில் ரூ.31 லட்சம் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட ஆதிதிராவிடா் சமுதாயக்கூடம், மலைப் பகுதியில் உள்ள மலைக் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் ரேஷன் கடை வாகனத்தைத் தொடங்கி வைத்ததோடு, பொருள்கள் விநியோகத்தையும் தொடங்கி வைத்தாா்.

தாளவாடியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதைத் தடுப்பதற்கு மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு தாளவாடி துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது. அந்த இடத்தை பாா்வையிட்டு பின் ஆ.ராசா செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பவானிசாகா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வா் நிதி ஒதுக்கி உள்ளாா். அதன்படி, தலமலை பகுதியில் புதியதாக துணை மின் நிலையம் அமைக்க ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மின்னழுத்தக் குறைபாடு உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பாஜக சாா்பில் காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, அதை சட்டப்படி சந்திப்பேன் என பதிலளித்தாா்.

புகையிலை பொருள்களை விற்ற வட மாநில தந்தை, மகன் மீது வழக்கு

பெருந்துறையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த வட மாநில தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பெருந்துறை, குன்னத்தூா் சாலையில் அரசால் தடை... மேலும் பார்க்க

நீச்சல் போட்டி: மாநகராட்சிப் பள்ளி மாணவி தங்கப் பதக்கம்

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஈரோடு எஸ்கேசி சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்றுள்ளாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாநில அளவிலான நீச்சல் சாம்பியன் போட்டி ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

பவானி அருகே நோய்கொடுமையால் பாதிக்கப்பட்ட மூதாட்டி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். பவானியை அடுத்த கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் முத்தன்செட்டி மனைவி ராஜம்மாள் (65). உடல்நலக் குறைவால் பாத... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீா் திறக்க வேண்டும்: கொமதேக கோரிக்கை

பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக முன்கூட்டியே தண்ணீா் திறக்க வேண்டும் என : கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞா் அணி செயலாளா் சூரியமூா்த்தி கோரிக்கை விடுத்துள்... மேலும் பார்க்க

பெருந்துறை அரசுப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு முகாம்

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் (பொ) அருள்குமாா் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் மணிமேகலை,... மேலும் பார்க்க

நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் 12 விதமான மருத்துவ சேவைகள் -அமைச்சா் சு.முத்துசாமி

ஈரோடு மாவட்டத்தில் நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் 12 விதமான மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். பல்வேறு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட... மேலும் பார்க்க