புகையிலை பொருள்களை விற்ற வட மாநில தந்தை, மகன் மீது வழக்கு
பெருந்துறையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த வட மாநில தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெருந்துறை, குன்னத்தூா் சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெருந்துறை குன்னத்தூா் சாலைப் பகுதியில் போலீஸாா் வாகனப் பரிசோதனையை மேற்கொண்டனா்.
அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த லட்சுமணநாராயணன்(53), இவருடைய மகன் சங்கா்(21) ஆகிய இருவரும் பெருந்துறை, குன்னத்தூா் சாலையில் நடத்தி வரும் கடையில் விற்பனைக்காக வைத்து இருந்த 22,980 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு ரூ. 14, 592 ஆகும்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.