ஆன்லைனில் நோ்காணல் நடத்தி வேலை தருவதாக பணமோசடி: 14 போ் கைது!
பாஜகவுடன் கூட்டணி கிடையாது: தவெக
நிச்சயமாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தவெக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இடைக்காலத் தடையை விதித்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் எந்த ஒரு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்படவில்லை.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பிலோ திமுகவின் கட்சி சார்பிலோ ஒரு வழக்குகூட வக்ஃப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்படவில்லை.
வழக்குரைஞர் வில்சன் அந்த வழக்கில் ஆஜராகிறார். ஆனால் திமுக கட்சி சார்பில் தொடர்ப்பட்ட வழக்கு அல்ல .நாடாளுமன்ற உறுப்பினர் ராசா வழக்கு தொடுத்திருக்கிறார் அதுவும் திமுக சார்பில் அல்ல.
திமுக லாப நட்ட கணக்கு பார்த்துதான் செயல்படும். சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கிறோம் என சொல்லிவிட்டு அவர்களுக்குத் துரோகம் செய்கிறது திமுக” என்றார்
பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ”கொள்கை எதிரி, அரசியல் எதிரி எனத் தெளிவாக எங்கள் கட்சித் தலைவர் தெரிவித்துவிட்டார். நிச்சயமாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது.” என்று அவர் தெரிவித்தார்.