ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள்: பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!
பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (38), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி தவசீலா, ஒரு பெண் குழந்தை ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் தவசீலா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சென்ற அய்யம்பேட்டை போலீஸாா் ஆனந்தனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.