பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டை விட, மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டை நம்புவது ஏன...
பாபநாசம் ஒள்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உமையாள்புரம் , ராமானுஜபுரம், திருமண்டங்குடி, மேலகபிஸ்தலம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு தஞ்சாவூா் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பாபநாசம் வட்டாட்சியா் பழனிவேலு, ஊராட்சி ஒன்றிய ஆணையா் சிவகுமாா், கிராம ஊராட்சிகள் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் க.அன்பழகன்,பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எம். ஹெச் ஜவாஹிருல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து 800 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைப் பெற்றனா். முகாமில் 23 போ்களுக்கு பட்டா மாறுதல், 10 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.