பிக் பாஸ் 8: பரம்பரைக்கே பெருமை... முத்துக்குமரனின் தாய் நெகிழ்ச்சி!
``பாப்கார்ன் விவகாரம் மீம்ஸ்களின் மூலம் கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது" - சாடும் காங்கிரஸ்
கடந்த சனிக்கிழமையன்று நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் கேரமல் செய்யப்பட்ட பாப் கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி. விதிக்கப்பட உள்ளதாகவும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மசாலா பாப் கார்னுக்கு 12 சதவிகிதமும், பாக்கெட் மற்றும் லேபிள் செய்யப்படாத பாப் கார்னுக்கு 5 சதவிகிதமும் வரி விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜிஎஸ்டியின்கீழ் பாப்கார்னுக்கான மூன்று வெவ்வேறு ஜிஎஸ்டி வரி விதிப்புகள் சமூக ஊடகங்களில் மீம்ஸ்களின் மூலம் கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. இது வளர்ந்து வரும் நல்ல, எளிமையான வரியாக கூறப்படும் ஜிஎஸ்டியில் இருக்கும் ஆழமான சிக்கலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அடியோடு மாற்றியமைக்க மோடி அரசுக்கு தைரியம் உண்டா?
ஜிஎஸ்டி முறையில் மோசடி செய்வதற்கென்று, போலி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன, இதனை கண்காணிப்பதும் பலவீனமாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பாப்கார்னுக்கு வரி விதிக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சசி தரூர், ``பாப்கார்ன் சாப்பிடுங்கள். அதைப் பற்றி யோசிக்காதீர்கள். நன்றாக தூங்குங்கள்... குட் நைட்" எனக் கிண்டல் செய்திருக்கிறார்.