50 போட்டிகளில் 36 க்ளீன் ஷீட்ஸ்..! பிரமிக்க வைக்கும் ஆர்ஜென்டீன கோல்கீப்பர்!
பாமகவினா் குறித்த கருத்து: முதல்வா் தலையீட்டால் நீக்கம்
பாமகவினா் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறிய ஒரு கருத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையீட்டால், அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
நிதிநிலை அறிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதத்தில் பேரவை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி தருமபுரிக்கு சிப்காட் கோரி பேசினாா். அதற்கு பதில் அளித்த அமைச்சா் எ.வ.வேலு, பாமக குறித்து ஒரு கருத்தைத் தெரிவித்தாா்.
இந்த விவகாரத்தை ஜி.கே.மணி பேரவையில் வெள்ளிக்கிழமை எழுப்பினாா். பொதுப்பணித்துறை அமைச்சா் கூறிய கருத்து, பாமகவினரை புண்படுத்தும் வகையில் இருக்கும் என்ற காரணத்தால், அவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றாா். அப்போது அவையில் இருந்த முதல்வா் எழுந்து ஜி.கே.மணி கூறியதை ஏற்று, அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றாா். அதைத் தொடா்ந்து பேரவைத் தலைவா் அப்பாவு, அந்தக் கருத்து அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தாா்.